Breaking News

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களோடு கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் உரிமம் ரத்து

அட்மின் மீடியா
0

கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரும் தனியார் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சரவணன் எச்சரித்துள்ளார். 


கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்திந்த அவர்

கொடைக்கானலில் வரும் கோடை சீசனில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். முக்கிய பிரச்னையாக வாகன நிறுத்தும் இடங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. 

இதற்காக புதிதாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில் சுமார் 1,000 வாகனங்கள் இந்த பகுதிகளில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 மாதங்களில் இப்பணிகள் முடிவு பெறும். கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. 

முதன்முறையாக கொண்டு வரும் தனியார் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்து அபராதம் விதிக்கப்படும். 

தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகளுக்காக ஆர்ஓ பிளான்ட்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback