தமிழ்நாடு அமைச்சரவை இலாகா மாற்றம் முழு விவரம்
தமிழ்நாடு அமைச்சரவை இலாகா மாற்றம் முழு விவரம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாக்கா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாக்காவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிப்பு
தி.மு.க., அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர், பரிந்துரைப்படி ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
பொன்முடி, வனம், காதி மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சராக இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இனிமேல் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார்.
Tags: அரசியல் செய்திகள்
