இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் - இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் முழு விவரம்
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மகிழ்ச்சியான தீர்ப்பு என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புகழேந்தி பேட்டி:-
இந்த நிலையில், இது மகிழ்ச்சியான தீர்ப்பு எனவும், இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம். இந்த வாட்டி ஏமாற்ற முடியவில்லை. நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கும், இந்த வழக்கில் வெற்றி பெற்றே தீருவோம்.
இனி எந்த பிரச்சனையும் இல்லை. இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். சிவில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி ஊரையும், உலகத்தையும் ஏமாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி என்ற தீயசக்தியிடம் இரட்டை இலை இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
