Breaking News

இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.. என்னை சோதிக்காதீர்கள் செங்கோட்டையன் பேச்சு

அட்மின் மீடியா
0

இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.. என்னை சோதிக்காதீர்கள் "- செங்கோட்டையன் பேச்சு

அத்திக்கடவு அவிநாசி திட்டம் பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லாத காரணத்தினால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார்.

இபிஎஸ் பாராட்டு விழா புறக்கணிப்புக்கு பிறகு நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேனரில் எடப்பாடிக்கு இணையாக தன் புகைப்படத்தை வைத்து கொண்டார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அப்போது அவர், ஜெயலலிதாவுடன் நான் 14 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாரதியாக செயல்பட்டவன். 1972ல் கட்சியைத் துவக்கிய எம்.ஜி.ஆர். பல்வேறு சோதனைகளை சந்தித்தவர். 

எதிர்க்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி கூட்டம் நடத்துகிறோம். கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக செய்தியாளர்கள் என்ன சொல்லப்போகிறேன் என்று கேட்டார்கள். ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றேன். தற்போது அதேதான் நான் எதுவும் சொல்லப்போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது.

பல வாய்ப்புகள் வந்தபோதும், அது பற்றி கவலைப்பட்டதில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனை மறந்துவிடக்கூடாது. என்னை சோதிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள். 

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு தெளிவான சிந்தனையோடு இருக்கிறேன் என்றார்.

நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்தவர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூடபயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback