இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற தாய் கைது முழு விவரம்
இன்ஸ்டாகாதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற தாய் கைது முழு விவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காதல் விவகாரத்தில் மகளுக்கு உணவில் எலி பேஸ்ட் கலந்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதுப்பட்டு கிராமத்தை சார்ந்த கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் சாய்குமார் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
மகளின் காதல் விஷயம் மல்லிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில் பெண்ணின் தாயார் மல்லிகா, முட்டை பொரியலை சமைத்து அதில் எலி பேஸ்ட் கலந்து கொன்றுவிடுவேன் என மகளை மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் முட்டை பொறியலை சாப்பிட்டுள்ளார் அந்த பெண் சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தகவல் அறிந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் மாணவியின் வாக்குமூலத்தை பெற்று, மல்லிகாவை மகளை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்
