Arokya Milk Price Hike ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு -முழு விவரம்
தமிழ்நாடு முழுவதும் இன்று திடீரென உயர்த்தப்பட்ட தனியார் பால் விலை... பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு முழுவதும் தனியார் நிறுவனத்தின் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசின் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் விற்பனை செய்து வருகிறது. இதேபோல், பல்வேறு தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஆரோக்கியா நிறுவனம் தனது ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி 71 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்து வருகிறது
இதேபோல், அரை லிட்டர் பாக்கெட் விலை, 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியா நிறுவன பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல், அரை லிட்டர் பாக்கெட் விலை, 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியா நிறுவன பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
