Breaking News

AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம் ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஏஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களிடம் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , டீப்சீக் தொழில்நுட்பங்கள் கொண்ட செயலிகள்/கருவிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டால் அரசின் தரவுகள் வெளியில் கசியும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback