Breaking News

எடப்பாடியில் தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிக்க மாணவர்கள் இடையே நடந்த மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நேற்று (10.02.2025) மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பி உள்ளனர். 

அப்போது பேருந்தில் இடம் பிடிப்பதில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்ற மாணவரை மார்பு பகுதியில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அந்த மாணவர் உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் இந்நிலையில், பதற்றத்தை தணிக்க விஸ்டம் பள்ளி முன் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback