Breaking News

கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

 கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்



கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். சென்ட்ரிங் தொழிலாளியான இவரது ஒரே மகன் நந்தீஸ் (9). 4ம் வகுப்பு படித்து வந்தான். மாதேஷின் மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். சிறுவன் நந்தீசை அவருடைய பாட்டி வளர்த்து வந்துள்ளார். 

கடந்த 5 நாட்களுக்கு முன்பு நந்தீஸ் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது.இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான். 

இந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சிறுவன் நந்திஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது தான் டாக்டரிடம் நந்திஷ் நாய் கடித்ததை கூறியுள்ளார்.உடனடியாக சிறுவன் நந்திஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஆம்புலன்ஸுக்குள் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனால், அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback