ஜிபிஎஸ் நோயால் திருவள்ளூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு முழு விவரம்
ஜிபிஎஸ் நோயால் திருவள்ளூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு முழு விவரம்
ஜிபிஎஸ் நோயால் திருவள்ளூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழப்பு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு.
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரில் வசித்து வருபவர் பிரேம்குமார் இவரது மகன் 9 வயது பி.மைத்தீஸ்வரன். இந்த சிறுவன் ஜனவரி 22ம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான்.
இதன் பின் திருவள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் சிறுவனை அழைத்து சென்ற பிறகு, எழும்பூர் குழந்தைகள் அரசு நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுவனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கிலன் பா சின்ட்ரோம் எனும் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் தொற்று உடன் இதய பாதிப்பும் இருந்ததால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அந்த சிறுவனுக்கு நரம்பு மண்டலத்தை முடக்கி உயிா் குடிக்கும் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனா்.
Tags: தமிழக செய்திகள்
