Breaking News

மானாமதுரை அருகே 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 7 பேர் போக்சோவில் கைது!! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
மானாமதுரை அருகே 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 7 பேர் போக்சோவில் கைது!! நடந்தது என்ன முழு விவரம்

மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில், குழந்தைகள் நல குழும விழிப்புணர்வு முகாமில் சிறுமிகளிடம் யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற கேள்விக்கு அளித்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள், தனித்தனியாக விசாரித்துள்ளனர்.  அப்போது பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூற போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), ராமு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நல வாரியம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. 

அப்போது, யாரேனும் உங்களிடம் தவறுதலாக நடந்துள்ளனரா எனக் கேட்டுள்ளனர்.அப்போது, முதலில் நான்கு மாணவிகள், தங்களிடம் பள்ளிக்குச் சென்று வரும் பொழுது தங்களைத் தவறான அணுகுமுறையில் தொட்டார்கள் எனவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர் எனவும் கூறியுள்ளனர். 

இது குறித்து மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முனியன் (66), மூக்கன் (72), ராமு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback