Breaking News

8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பள்ளி மாணவியின் புகாரை அடுத்து அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..

பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், கைதான ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷை சஸ்பெண்ட் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback