Breaking News

கேரளா அரசு நர்ஸிங் கல்லூரியில் அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு கொடூர ராகிங் - 5 பேர் கைது Ragging Horror At Kerala Medical College

அட்மின் மீடியா
0

கேரளா அரசு நர்ஸிங் கல்லூரியில் அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு கொடூர ராகிங் - 5 பேர் கைது Dumbbells Hung From Private Parts Ragging Horror At Kerala Medical College

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு செவிலியர் கல்லூரியில் கடந்த 3 மாதங்களாக தங்களுக்குத் தொடர்ந்து ராகிங் கொடுமை நடப்பதாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் காவல்துறையில் புகாரளித்தனர்.

ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்த ரேகிங், நாட்கள் செல்ல, செல்ல எல்லை மீறத் தொடங்கி இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு, அவர்கள் தரவில்லை என்றால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தங்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் நிர்வாணமாக நிற்கவைத்து உடற்பயிற்சி செய்யும் டம்பிள்களை வைத்து தாக்கியதாகவும் அவர்களின் ஆணுறுப்பில், உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் தம்பிள்ஸ்-ஐ கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

மேலும், காம்பஸ் மற்றும் கத்தி போன்றவற்றால் தங்களை குத்திக் காயப்படுத்தியதாகவும் முகம், தலை, வாய் முழுக்க க்ரீம் தடவி கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கொடுமையை சகித்துக்கொள்ள முடியாத ஜூனியர் மாணவர்கள் 3 பேர் காந்திநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஐந்து சீனியர் மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Give Us Your Feedback