சவுதி அரேபியாவின் முதல் பாலைவன 5 ஸ்டார் சொகுசு ரயில் அறிமுகம் வைரல் புகைப்படங்கள் Dream of the Desert images
சவுதி அரேபியாவின் முதல் பாலைவன 5 ஸ்டார் சொகுசு ரயில் அறிமுகம் வைரல் புகைப்படங்கள் Dream of the Desert images
பிரபல கட்டடக் கலைஞரான Aline Asmar d'Amman வடிவமைத்த 'Dream Of The Desert' ரயிலின் உட்புற வடிவமைப்பு தொடர்பான புகைப்படத்தை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது
'Dream Of The Desert' 2026 தொடங்கப்படவுள்ளது. குறிப்பாக, Vision 2030 திட்டத்துடன் இணைந்து சவுதி அரேபியாவை ஆடம்பர சுற்றுலா தலமாக மாற்றி பயணிகளுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்க முடிவு செய்துள்ளது அந்நாட்டு அரசு! இந்த Dream of the Desert மத்திய கிழக்கு நாடுகளிலும் முதல் சொகுசு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாலைவன ரயில் ரியாத்தில் தொடங்கி வடக்கே ஜோர்டான் எல்லை பகுதியில் அமைந்துள்ள அல் குராயத் வரை 1,300 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த பாலைவன கனவு ரயில் ஆடம்பர சுற்றுலா சேவையை மேம்படுத்தும் நோக்கில் 14 பெட்டிகள் மற்றும் 34 சொகுசு அறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயிலின் உட்புறங்கள் பாலைவன நிலப்பரப்புகள் மற்றும் நாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலையைபிரதிபலிக்கின்றன. மேலும், இந்த ரயில் 2026-ன் மூன்றாம் காலாண்டின் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலைவன சொகுசு ரயில் பயணத்தில் இடம்பெற்றுள்ள அல் குவாசிம், ஹெயில், அல் ஜோவஃப் ஆகிய 3 ரயில் நிலையங்கள் பெரிதும் கவரக்கூடிய வகையில் வடிவமைக்கபப்ட்டு வருகின்றது
Tags: வெளிநாட்டு செய்திகள்




