Breaking News

திருப்பதி லட்டு பிரசாதம் கலப்பட நெய் விவகாரம் - 4 பேர் கைது

அட்மின் மீடியா
0

திருப்பதி லட்டு பிரசாதம் கலப்பட நெய் விவகாரம் - 4 பேர் கைது


லட்டுக்கு கலப்பட நெய் வழங்கிய புகாரில் ஏ.ஆர். டெய்ரி மீது வழக்குப் பதிவு

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இந்நிலையில் இந்த விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் நாளை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback