ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் 4 மாத சிசு உயிரிழப்பு முழு விவரம்
ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் 4 மாத சிசு உயிரிழப்பு முழு விவரம்
பாலியல் துன்புறுத்தல் 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்ற சோகம் இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுரை என தகவல் வெளியாகி உள்ளது
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். வேலூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது அந்த ரயிலில் பயணம் செய்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த கர்ப்பிணி பெண் கழிவறை செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என பயந்த மர்ம நபர்கள் கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கை, காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் கழிவறையில் வழுக்கி விழுந்து இடது கால் எலும்பு முறிந்தது இந்நிலையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் 4 மாத சிசு உயிரிழந்துள்ளது
Tags: தமிழக செய்திகள்
