கார் வருவதை அறியாமல் ஓடிவந்த 4 வயது சிறுவன் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி Sensitive Visuals⚠️
கார் வருவதை அறியாமல் ஓடிவந்த 4 வயது சிறுவன் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் கார் மோதியதில் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பதார்டி பாட்டா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலில் புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்த குழந்தை துருவ் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
துருவ் தனது தந்தையுடன் ஹோட்டலில் உள்ள கார்டன் பகுதியில் விளையாடிவிட்டு திரும்பி ஓடிவந்தபோது காரை கவனிக்காமல் வந்து காரின் முன்பக்கம் விழுந்து விட்டார்
அதில் கார் சிறுவன் மீது ஏறி இறங்கியது சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளி கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டுள்ளார்
இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவனது தந்தையும் ஹோட்டலின் பாதுகாப்புக் காவலர்களும் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
தகவல் அறிந்து வந்த இந்திராநகர் காவல் நிலையத்தில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார், மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
A 5 year old child was crushed by a car in Nashik.The child died on the spot. The victim's father was going to the hotel lobby with his two children in a big hotel in Nashik, when suddenly the child came in front of the car and became a victim of the accident.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1887827337376637305
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
