Breaking News

சிவகங்கை சாதி கொடூரம் - நீ எப்படி புல்லட் ஓட்டலாம் பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய 3 பேர் கைது - நடந்தது என்ன?

அட்மின் மீடியா
0

சிவகங்கை சாதி கொடூரம் - நீ எப்படி புல்லட் ஓட்டலாம் பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய 3 பேர் கைது - நடந்தது என்ன?

சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய பட்டியலின மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ" என்று கூறி 3 பேர் கையை வெட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராமன்-செல்லம்மா தம்பதிகளின் மகன் அய்யாசாமி (வயது19). இவர் சிவகங்கை அரசு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் அக்கிராமத்தில் சற்று வசதியாகவும், புதிதாக வீடுகள் கட்டியும் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சித்தப்பா பூமிநாதன் புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். 

இந்நிலையில் நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடுவரும் பொழுது, வீட்டின் அருகே மறைத்திருந்து இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம் என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 

கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்ற நோக்கத்துடன் அவரின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இளைஞர் அய்யாசாமியை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமிநாதனின் வீட்டை மாற்று சமூகத்தினர் அடித்து நொறுக்கி உள்ளார்கள், இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, ஓடு என வீடு சேதம் அடைந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback