Breaking News

சென்னையில் காலி சிலிண்டரை மாற்றும் போது வெடித்து 3 பேர் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் காலி சிலிண்டரை மாற்றும் போது வெடித்து 3 பேர் உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 62), கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(57). வீட்டு வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் கடந்தவாரம் வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டதால். புது சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் குபீரென தீப்பற்றியது. இதில் வீரக்குமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மருமகன் குணசேகரனும் தீக்காயம்(40) அடைந்தார். 

ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் கடந்த 1 வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அடுத்தடுத்து சிகிச்சை பலியின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback