விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீர் உள்ள அண்டாவில் தவறி விழுந்து உயிரிழப்பு முழு விவரம்
விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீர் உள்ள அண்டாவில் தவறி விழுந்து உயிரிழப்பு முழு விவரம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சோமசுந்தரம் மற்றும் காஞ்சனாதேவி. இவர்களது இரண்டு வயது மகள் சபீனா பானு, அண்டா நிரம்பிய தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள். எதிர்பாராத விதமாக தண்ணீர் நிரம்பியிருந்த அண்டாவில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து, மூச்சு விடமுடியாமல் தத்தளித்துள்ளது. அந்த நேரம் குழந்தையை யாரும் பார்க்காததால், அண்டாவில் விழுந்த குழந்தை தலைக்குப்புற கவிழ்ந்த படியே இருந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து குழந்தையின் தாய் காஞ்சனாதேவி அண்டா அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதைக் கவனித்து, குழந்தையை வீடு முழுவதும் தேடியுள்ளார். ஆனால், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என, குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அண்டாவிற்கு அருகே சென்று அண்டாவிற்குள் பார்த்துள்ளார்.
அப்போது குழந்தை அண்டாவிற்குள் தலைக்குப்புற கவிழ்ந்த படி கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை சென்றனர் அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் ஆய்வாளர் கோகிலா, குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
