Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் அவர்கள் பேசியது என்ன முழு வீடியோ

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் அவர்கள் பேசியது என்ன முழு வீடியோ

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. 

விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்

இந்த விழாவில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. தோழிகளே.. எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான்ல.. ஏனென்றால் இந்த அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்க முடியும். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்றும் சொல்லவே முடியாது. கணிக்கவே முடியாது.

ஒரு அரசியல் கட்சியின் பெரிய பலமே கட்டமைப்பு தான். ஆலமரம் மாதிரி ஒரு கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றால், அதன் விழுதுகளும் வேர்களும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா.. அப்படித்தான், இப்போது நாம் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.. 

நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்.

எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக, விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும். 

மக்களோட நலனை பற்றியோ.. நாட்டோடைய நலனை பற்றியோ.. வளர்ச்சிகளை பற்றியோ.. இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல், பணம்.. பணம்.. என்று எந்தெந்த வழிகளில் எப்படியெல்லாம் சம்பாதிக்கனும் என்ற இப்படிப்பட்ட மைண்ட் செட் உள்ள பண்ணையாளர்களை அரசியலை விட்டே அகற்றுவது தான் நம்முடைய முதல் வேலை

கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேபோல் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் செட்டிங் செய்து வைத்து கொண்டு சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/bjp-state-president-annamalai-questions-tvk-leader-vijay-regarding-hindi-imposition-controversy-683275.html

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, எது எப்போது வேண்டுமானாலும் மாறும். அரசியலில் யார், யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது, என்னை வீழ்த்த நினைக்கிறார்கள் என கூறினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1894665167423918153

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback