மதுரை சோழவந்தானில் ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு முழு விவரம்
மதுரை சோழவந்தானில் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு முழு விவரம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 20- க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை பாலம் அருகே அமைந்துள்ள பிரீட்டா உணவகத்தில் நேற்று இரவு கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட சுமார் 22 பேருக்கு நள்ளிரவு முதல் வாந்தி, பேதி கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதேபோன்று சோழவந்தான் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்
