Breaking News

சென்னை விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை -திருப்பி தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா 2023ல் சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரான்சில் வசித்து வந்த ஜெயகாந்த், மனைவிக்கு விசா பெறும் வரை அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். 



விசா பெற்றதை அடுத்து சென்னை திரும்பிய தன்ஷிகாவை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தன்ஷிகா அணிந்த வளையல் தாலி சங்கிலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தனர் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நமது மரபுப்படி அதிக எடையில் தாலி சங்கிலி அணிவது வழக்கம். இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். 

கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை துவங்காத பெண்ணின் தாலி சங்கிலியை அகற்றிய செயல் நியாயமற்றது எனக் கூறி நகைகளை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback