கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் மிரண்டதால் மோதிக்கொண்ட 2 யானைகள்.... 3 பேர் பலி அதிர்ச்சி வீடியோ
கோவில் திருவிழாவில் மோதிக்கொண்ட 2 யானைகள்.... 3 பேர் பலி அதிர்ச்சி வீடியோ
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சுவாமி வீதி உலாவில் பட்டாசுகள் வெடித்த போது மிரண்ட 2 யானைகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதனால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் 65 வயது லீலா , 70 வயது அம்மு குட்டியம்மா ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த கோழிக்கோடு போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் .மேலும், படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1890231577231388954
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
