மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் ஜிபிஎஸ் நோய் தொற்று 149 பேருக்கு பாதிப்பு.பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! GBS outbreak
இந்தியாவில் ஜிபிஎஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளது மேலும் ஜிபிஎஸ் தொற்று நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், ஜிபிஎஸ் எனப்படும் 'கிலான் பாரே சிண்ட்ரோம்' என்ற நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றால் இதுவரை 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிலன் பார் சிண்ட்ரோம் ஒரு தொற்று நோய் அல்ல. இது ஆட்டோ இம்யூன் நோயாகும். அதாவது, நம்முடைய உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு மண்டலம் நம்மை பாதுகாக்கும் வேலையை செய்யாமல், நம் உடலையே தாக்க ஆரம்பிக்கும்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், இந்த நோய் 'ஆட்டோ இம்யூன்' என அழைக்கப்படுகிறது.
இந்த நோயின் ஒருவகை தான் ஜி.பி.எஸ். ஆகும். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.உடலில் உணர்வின்மை, தசை பலவீனம் மற்றும் உடல் பாகங்கள் செயலிழந்து, மரணத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடல் சோர்வு, தசை பலவீனம், நரம்புகளில் பிரச்னை என பெரும் அவதிக்குள்ளாவார்கள்.
இந்த அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். நோயாளிகளால் எழுந்து நடக்க முடியாது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. இருப்பினும், நீர் அல்லது உணவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்றுகளால் நோய் பரவும் அபாயம் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய உயர் மட்ட நிபுணர்களை புனேக்கு அனுப்பி, Guillian Barre Syndrome பிரச்னைக்கான காரணங்களை ஆய்வு செய்யவும், அம்மாநிலத்தில் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த உதவவும் அறிவுறுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
