Breaking News

சென்னையில் அதிர்ச்சி போலிஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டிராஃபிக் போலீஸ் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் அதிர்ச்சி போலிஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டிராஃபிக் போலீஸ் கைது நடந்தது என்ன முழு விவரம்



சென்னையில் போலீஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்தவாரம்  வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தச் சிறுமியை போலீசார் தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் அந்த 13 வயது சிறுமி தனது காதலனை சந்திக்க வந்தபோது, பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளித்து உதவ வேண்டிய, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் போலீஸ் பூத்தில் வைத்து அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 16 வயது ஆண் நண்பரும், அதற்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரின் தாயாரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், ஆகிய 3 பேரை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்துள்ளார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback