அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் 12 பேர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து சுமார் 3000 நிர்வாகிகள் விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
இந்நிலையில் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அவர்கள் பட்டியல்
1. நீல. மகாலிங்கம், மண்டலச் செயலாளர், 2021-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
2.ப.பிரபாகரன், அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர், (மே)
3.பா. கலைச்செல்வன், அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர், (கி)
4.பெ. அய்யப்பன், அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்,
5.வி. ஜெய்குமார், அரியலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர்,
6.ம.அஜித்குமார், அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர்,
7. சீ. கமலகண்ணன், அரியலூர் தொகுதி செயலாளர், (கி),
8. வி. டென்னிஸ் செபஸ்டியன், ஜெயங்கொண்டம் தொகுதி பொருளாளர், (தெ)
9. க.வினோத் ஜெயங்கொண்டம் தொகுதி துணை தலைவர், (ந)
10. க. சந்தோஷ் தா.பழூர் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர், (கி)
11. பி. மணிவேல், அரியலூர் தொகுதி வீர தமிழர் முன்னனி (மு) தொகுதி செயலாளர்,
12. கா. விஷால், கிளைச் செயலாளர், நாயகனைப்பிரியாள்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
