காதலிக்கும் போது காதலிக்கு முத்தம் கொடுப்பது குற்றமில்லை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காதலிக்கும் போது காதலிக்கு முத்தம் கொடுப்பது குற்றமில்லை - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம் பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர்.
அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், இளம் பருவத்தில் காதலிக்கும், இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது IPCயின் 354-A(1)(i) பிரிவின் கீழ் குற்றமாக அமையாது எனவே இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Tags: தமிழக செய்திகள்