ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரயில்வே வாரியம் உத்தரவு!
ரயில் தண்டவாளங்களில் நின்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரயில்வே வாரியம் உத்தரவு!
ரயில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விதிமுறைகளை மீறும் ரீல் தயாரிப்பாளர்களுக்கு எதிராக “ஜீரோ டாலரன்ஸ்” கொள்கையை கடைபிடிக்குமாறு ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறைக்கு ரயில்வே வாரிய அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நோக்கில் இளைஞர்கள் ரயில் தண்டவாளங்களில் உயிரை பணயம் வைத்து ரிலீஸ் எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே வாரியம் எந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்