பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேசிய மக்கள் கட்சி முழு விவரம்
பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேசிய மக்கள் கட்சி முழு விவரம்
பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா, ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூரில் 7 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள தேசிய மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாகும்.
மணிப்பூர் வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் தலை நகரம் இம்பால் ஆகும். மணிப்பூர் வடக்கில் நாகலாந்து ,தெற்க்கில் மிஸோரம், மேற்க்கில் அஸ்ஸாம் கிழக்கில் மியன்மாருக்கு நடுவில் உள்ளது
மணிப்பூரை பொறுத்தவரையில் அங்கு எண்ணிக்கையின் அளவில் மிக பெரிய சமூகமாக இருப்பது மைத்தி சமூகம் இவர்கள் மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்பு 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.
ம்ணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளது,தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகின்றது
பிரச்சனை:-
மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தினரை சேர்க்க இணைக்கவேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை
அதே சமயம் மைத்தி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றார்கள்
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மைத்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மைத்தி சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.
ஆதரவு வாபஸ்:-
இந்த நிலையில் மணிப்பூர் ஆளும் பாஜக அரசு, வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதால் அந்த அரசுக்கான ஆதரவை 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி இன்று வாபஸ் பெற்றுள்ளது.
60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 31 எம்.எல்.ஏக்கள்.தேவை பாஜகவோ தனித்தே 37 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்