ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி விடாமல் சென்ற வாகன ஓட்டிக்கு வீடு தேடி சென்று அபராதம் விதித்த கேரளா போலீஸ் வீடியோ
ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி விடாமல் சென்ற வாகன ஓட்டிக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்த கேரளா போலீஸ் வீடியோ
பொதுவாக ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டாலே எல்லாருக்கும் ஒரே மாதிரி தான், எதோ உயிருக்கு ஆபத்துன்னு நினைத்து உடனே எந்த டிராபிக் ஜாம் வந்தாலும் ஆம்புலன்ஸ் போக ட்ராஃபிக் க்ளியர் ஆகிடும்.
ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டவுடன் அதில் உள்ள நபர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இருக்கிறார் என்று அர்த்தம் உடனே நாம் அவர்களுக்கு சைட் வழி கொடுக்க வேண்டும்.
மோட்டார் வாகன விதிகளின்படி, வழியில் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை, அவசரகால போலீஸ் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். இதில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே போல் 2வது முறையாக பதிவு செய்தால் 25,000 ரூபாய் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால், வழக்கின் தீவிரத்தை உணர்ந்த விதிமீறலில் அதிக அபராதம் விதிக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.
கேரளாவில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்க்கு வழி விடாமால் சென்ற கார் உரிமையாளருக்கு வீடு தேடி சென்று 2.5 லட்சம் (Fine) அபராதம் விதித்த போலீசார் என ஓர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வைரல் வீடியோவில் மாருதி சியாஸ் காரில் பயணித்த நபர் ஆம்புலன்ஸ் முன்பு சென்று கொண்டு இருக்கின்றார், ஆம்புலன்சில் சைரன் அடிக்கின்றது , ஆனாலும் அவர் வேண்டுமென்றே சாலையை விட்டு செல்லவில்லை. ஆம்புலன்சை விட வேகமாக காரை ஓட்டிச் செல்கின்றார்
ஆம்புலன்ஸ் முன் அமர்ந்திருந்த உதவி ஊழியர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வீடியோ தகவல் தருகிறது.
ஆனால் இந்த வீடியோ குறித்த தெளிவான தகவல்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1857958942233755820
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ