நாம் தமிழர் கட்சியில் பொறுப்பாளராக செயல்பட்ட தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் முழு விவரம்
தமிழக அரசு அதிகாரியாக இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பாளராக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை தாசில்தாராக பணியாற்றி வருm செல்வக்குமார் நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலராக செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலி மாவட்ட அளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றிருந்த கூட்டத்தில் செல்வகுமாரும் பங்கேற்றுள்ளார்.
மேலும் பல்வேறு கலந்தாய்வு கூட்டத்திலும் சீமானுடன் செல்வக்குமார் பங்கேற்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் கவனத்துக்கு சென்றதை அடுத்து ஆட்சியர் தலைமையில் மாலையில் விசாரணை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தாசில்தார் செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள்