கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் இதோ
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் இதோ
மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக 18.11.2024 இன்று
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிப்பதால், பள்ளிகளுக்கு இன்று (நவ.18) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்டஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்
குறிப்பு:- வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்
Tags: கல்வி செய்திகள்