காற்று மாசு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்பு, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிப்பு!
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிப்பு!
டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அரசு, மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதியளிக்கபப்பட்டுள்ளது
மேலும் 6 ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பொதுவாக காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அந்தவகையில் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
Tags: இந்திய செய்திகள்