திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்று துப்பாக்கி வெடிக்காததால் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ
திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்று துப்பாக்கி வெடிக்காததால் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட முயன்றபோது துப்பாக்கி லாக் ஆனதால் தப்பியோட முயன்ற நபரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து மக்கள் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ
கொல்கத்தா மாநகராட்சியின் வார்டு எண் 108-ன் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுஷாந்தா கோஷ் தனது வீட்டு வாசலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் இருவரில் அவர்களில் ஒருவர் இறங்கி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இருப்பினும், கைத்துப்பாக்கியில் இருந்து தோட்டா எதுவும் வெளியாகவில்லை,
அவர் பைக்கில் ஏறி தப்ப முயன்றார், ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்தனர், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கோஷ், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்க முடியும் என்பது குறித்து தனக்கு எந்தத் துப்பும் இல்லை என்று கூறினார்."நான் 12 ஆண்டுகளாக கவுன்சிலராக இருக்கிறேன், நான் என் பகுதியில் அமர்ந்திருக்கும்போது என்னைத் தாக்கலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை," என்று கோஷ் கூறினார்.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் குழுவொன்று குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.உள்ளூர் எம்பி மாலா ராய் மற்றும் எம்எல்ஏ ஜாவேத் கான் பின்னர் கவுன்சிலரை சந்தித்தனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1857617533182116116
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ