சாலையை இரு சக்கரவாகனத்தில் கடந்த கல்லூரி மாணவி மீது பேருந்து மோதி விபத்து - சிசிடிவி வைரல் வீடியோ
நெல்லை அருகே, நின்றுகொண்டிருந்த பேருந்தின் முன்பக்கமாக இருந்து இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் தனியார் பேருந்து மோதி உயிரிழப்பு
நெல்லை இராமையன்பட்டி சிவாஜி நகர் அருகில் இருசக்கர மற்றும் பேருந்து விபத்து....பெண் மீது பேரூந்து மோதிய பரபரப்பு காட்சிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மானூர், இராமையன்பட்டியை அடுத்துள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்துரை இவருக்கு எஸ்தர் மேரி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.இதில் 3-வது மகள் செல்வம் (19) என்பவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை தங்கை சுதர்சனாவை பள்ளிக்கு அனுப்புவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர் தங்கை சுதர்சனாவை பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு செல்ல சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையை கடக்க முயன்றபோது நெல்லையை நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த கல்லூரி மாணவி செல்வம், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் கல்லூரி மாணவி சிக்கிய சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1857086051380068423
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ