Breaking News

திருநெல்வேலியில் அமரன்,கங்குவா படம் ஓடும் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

திருநெல்வேலியில் அமரன் , கங்குவா படம் ஓடும் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சி சிசிடிவி வீடியோ



திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் அமரன்,கங்குவா படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது அமரன் படம். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது

இப்படத்தில் காஷ்மீரிகளை தவறாக சித்தரித்துள்ளதாக பல அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அலங்கார் திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரையரங்கில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். 

திரையரங்கின் வளாகத்தின் முன்புறத்தில் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1857637457853898872

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: அரசியல் செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback