எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழப்பு மருந்து அடித்த நபர் கைது
சென்னை குன்றத்தூரில் எலி மருந்து காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டில் எலி மருந்து வைத்த தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் Pest Control நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் வீட்டில் மருந்து அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சு, மருந்தில் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல். கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றார்கள்
சென்னை குன்றத்தூரில் கிரிதரன் என்பவர் தனது மனைவி பவித்ராவு மற்றும் விஷாலினி (6 வயது) சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் குன்றத்தூரில் வசித்து வருகிறார்.
அவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் நேற்றிரவு எலி மருந்து அடிக்கப்பட்ட அறையில் ஏ.ஸி. யை போட்டுக் கொண்டு நான்கு பேரும் உறங்கினார்கள்.
இந்நிலையில் மருந்தின் நெடி அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதரன், பவித்ரா ஆகியோர் போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்