உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஐசியூ வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு 35 குழந்தைகள் காயம்
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூ வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலத்த காயமுற்றனர். இதில் சில குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை போராடி அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி, சுகாதாரத் துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்