Breaking News

தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி எது - குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா?

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி எது - குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா?



தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதியும் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று  (அக்.29) அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது 6,27,30,588 வாக்காளர்கள் உள்ளனர். 

ஆண்கள்: 3,07,90,791, 

பெண்கள்: 3,19,30,833, 

மூன்றாம் பாலினத்தவர்: 8,964

மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,76,133 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது (ஆண்கள்: 3,38,183, பெண்கள்: 3,37,825, மூன்றாம் பாலினத்தவர்: 125) 

மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1,73,230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது. (ஆண்கள்: 85,065, பெண்கள்: 88,162, மூன்றாம் பாலினத்தவர்: 3)

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback