Breaking News

நடுரோட்டில் மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நடுரோட்டில் மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியர் வைரல் வீடியோ

 


ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் உள்ள யோகி வேமண்ணா பள்ளியில் கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளது. 

இதில் சேர்ந்த ஓசூரைச்புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பள்ளி மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்

இந்த நிலையில் அந்தப் போட்டியின் பொழுது ஜான் பாஸ்கோ பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பயிற்சியாளர் தியாகராஜன் ஒரு மாணவியை கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து மாணவிகளை அடித்த ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாகலூர் போலீசார் பயிற்ச்சியாளர் தியாகராஜனை கைது செய்துள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1850876409327349882

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback