Breaking News

ஜமாத் நிலத்தை விநாயகர் கோயில் கட்ட தானமாக வழங்கி கும்பாபிஷேகத்திற்க்கு சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜமாத் நிலத்தை விநாயகர் கோயில் கட்ட தானமாக வழங்கி கும்பாபிஷேகத்திற்க்கு அன்னதானம் வழங்கி சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் வீடியோ 

திருப்பூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் பல்வேறு சமூகத்தில் வசித்து வரும் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் சகோதரர்களாக வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் தொழுகைக்கான பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. இந்து குடும்பத்தினர்கள் வழிபட கோவில் இல்லாததால் புதிதாக கோயில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.

ஆனால் அதற்க்கான இடம் இல்லாமல் இருந்த நிலையில் அதனை அறிந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் ஜமாத்க்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அந்த இடத்தில் முறைப்படி விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழாவும் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது இஸ்லாமியர்கள்  தட்டுகளில் சீர்வரிசை சுமந்து வந்து வழங்கி குடமுழுக்கில் கலந்து கொண்டனர். 

குடமுழுக்கு விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கியது மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டாக அமைந்தது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/RHoneykumar/status/1794962434937196960

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback