Breaking News

இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கிய ஈரான் குண்டுமழை பொழியும் வீடியோக்கள் பார்க்க Iran attacking ISRAEL

அட்மின் மீடியா
0
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கிய ஈரான் குண்டுமழை பொழியும் வீடியோக்கள் பார்க்க


காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் கோபம் அடைந்த ஈரான் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. 

அதன்படி இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி வான்வழி தாக்குதலை தொடங்கியது ஈரான் நாடு

மேலும் ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்கி அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்து இஸ்ரேல் நாட்டில் விழுந்துள்ளது

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைத்துள்ளது

ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல்.

ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம். மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது

நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்து களத்தில் குதிக்க தயாராகி உள்ளது

இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை. இந்நிலையில், பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்.

ஈரானின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம். இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


https://twitter.com/itsHarishop/status/1779333013979251088/video/1


https://twitter.com/saini_indraj5/status/1779337113055777004/video/1


https://twitter.com/KaliwalYam/status/1779292145649594424


https://twitter.com/MrSahuRajaram/status/1779337315279888395/video/1


https://twitter.com/rose_k01/status/1779287960166568166


https://twitter.com/InderSinghBha18/status/1779316694303072482/video/1

CLICK HERE

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback