Breaking News

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

அட்மின் மீடியா
0

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர்.ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளான இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தது. 




பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா(வயது 30).ஆகிய இருவரும் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.என தெரிவித்துள்ளனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback