Breaking News

கர்நாடகாவில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் படுகொலை ! லவ் ஜிகாத் சர்ச்சை முழு விவரம்

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் இஸ்லாமிய இளைஞரால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்., கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா, ஹூப்பள்ளியில் உள்ள் பிவிபி தனியார் கல்லுாரியில் எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இதே கல்லூரியில் இஸ்லாமிய மாணவராக பயாஸ் கோண்டு நாயக்கும் படித்து வந்திருக்கிறார். ஃபயாஸூக்கு நேஹா மீது ஒருதலைபட்சமாக காதல் . ஆனால், நேஹா இதை கண்டுக்கொள்ளவில்லை.நேஹாவை துரத்தி துரத்தி தொந்தரவு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நேஹா, ஃபயாஸை கடுமையாக எச்சரித்திருக்கிறார்,

இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து கல்லுாரி வளாகத்தில் நடந்து சென்றார்.நேஹாவை வழிமறித்த பயாஸ், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். 

கொலையை கண்டித்து, பா.ஜ., ஹிந்து அமைப்புகள், ஏ.பி.வி.பி., மாணவ அமைப்பினர் காதலித்து மதம் மாற்றும் லவ் ஜிகாத்துக்கு உடன்படாததால், இந்த கொலை நடந்ததாக பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமயைா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரத்தில் வழக்கை ஹூப்பள்ளி மாவட்ட போலீசாரிடமிருந்து சி.ஐ.டி., போலீசாரிடம் வழக்கை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பயாஸ் தந்தை பாபாசாகேப் சுஹானி  கூறுகையில் பயாஸ் செய்த தவறை மன்னிக்க மாட்டேன். அவனுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்வேன். அவனுக்கு கிடைக்கும் தண்டனையை பார்த்து, இனி பெண்கள் மீது கையை வைக்க யாராக இருந்தாலும் பயப்பட வேண்டும் என கூறியுள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback