Breaking News

கொரானா COVISHIELD தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் Astra Zeneca நிறுவனம் ஒப்புதல்!

அட்மின் மீடியா
0

கொரானா COVISHIELD தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும் AstraZeneca நிறுவனம் ஒப்புதல்!

Astra Zeneca நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது

இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், AstraZeneca-வின் இந்த விளக்கத்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் சூழல் உருவாகி உள்ளது

கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரானா தடுப்பூசியை உருவாக்கின.இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. 

அஸ்டாரஜெனெகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் 51 பேர் வழக்கு தொடர்ந்தனர், அதில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக பிரிட்டனின் தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

NEWS SOURCE

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback