Breaking News

பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என பரவும் பொய்யான தகவல் யாரும் நம்பாதீங்க laptop fake news

அட்மின் மீடியா
0
இணையத்தில் பரவும் செய்தி:-

பிரேக்கிங் நியூஸ்!  PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது.

எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை.*

விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன!  விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன

காலக்கெடுவை:04/30/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்



உண்மை என்ன:-

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இலவச லேப்டாப் வழங்குவதாகவும் , அதனைப்பெற இந்த லிங்கில் சென்று உங்கள் விபரம் அளிக்கவும்  என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது



முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...

அது போல் ஓர் செய்தியை இந்திய அரசும் சரி, நம் தமிழக அரசும் இது போல் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் 

இரண்டாவது எச்சரிக்கை அவசியம்

இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக கவனம் தேவை 

இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது 

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

மேலும் இந்த செய்தி குறித்து மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்திய அரசு இலவச லேப்டாப் கொடுப்பதாக பரவி வரும் மெசேஜ் போலியானது என்றும் இதுபோன்ற எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை எனவும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. 

இலவச லேப்டாப் என்ற மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டும் என்ற அறிவுறுத்தும் வகையில் பிஐபி இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறது.

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: FACT CHECK

Give Us Your Feedback