Breaking News

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் இருந்து நெல்லை வரையிலும், மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை வரையிலும் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.


சென்னை To நெல்லை சிறப்பு ரயில்கள்:-

சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப். 12, 19, 26 மற்றும் மே 10,17,24,31-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். 

சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10-க்கு நெல்லை சென்று சேரும். நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏப். 11,18, 25 மற்றும் மே மாதத்தில் 9, 16, 23, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். 

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். 

மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். 

எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்.

கொச்சுவேலி To பெங்களூரு சிறப்பு ரயில்கள்

கொச்சுவேலியில் இருந்து பெங்களூருக்கு ஏப்.9 முதல் மே 28 வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூா் சென்றடையும். மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து ஏப்.10 முதல் மே 29 வரை புதன்கிழமை தோறும் பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும்.

மும்பை லோகமான்ய திலக் To கொச்சுவேலி சிறப்பு ரயில்கள்

மும்பையின் லோகமான்ய திலக் முனையத்தில் இருந்து கொச்சுவேலிக்கு ஏப்.11 முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். 

மும்பையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். 

மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து மும்பைக்கு ஏப்.13 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் மாலை 4.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் தானே, ரத்னகிரி, உடுப்பி, மங்களூா், காசா்கோடு, கோழிக்கோடு, எா்ணாகுளம், கோட்டயம் வழியாக இயக்கப்படும்

Give Us Your Feedback