Breaking News

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் ஓட்டு போட இலவச வாகன வசதி - இந்த நம்பருக்கு போன் பண்ணா போதும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் ஓட்டு போட இலவச வாகன வசதி - இந்த நம்பருக்கு போன் பண்ணா போதும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நாளை (ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரத சாஹு, 

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் 

மேலும் காலை 7 மணி முதல் 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்கும் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதேபோல்  மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback