Breaking News

ஓட்டு போட போகும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் இலவச பயணம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வாக்குப்பதிவு நாளன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பேருந்து பயணம்

காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவு

இது குறித்து போக்குவரத்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

19.04.2024 அன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் கோவை போக்குவரத்து கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி 19.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback